சாதாரண காய்ச்சலுக்கு டெங்கு ஊசி போட சொல்லி பொது மக்கள் மருத்துவர்களை கட்டாயப்படுத்த கூடாது என்று சுகாதார அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சிவகங்கையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் பருவகால சூழல் மாற்றத்தால் காய்ச்சல் ஏற்படுவதாகவும் காய்ச்சல் ஏற்பட்டால் உடனே மருத்துவமனையை அணுக வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்
மேலும் டெங்கு காய்ச்சலுக்கு உலக சுகாதார மருத்துவமனையின் அணுகுமுறை படியே சிகிச்சைகள் மேற்கொள்வதாகவும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் ஊசி போடா சொல்லி மருத்துவர்களை வற்புறுத்த கூடாது என்றும் அவர் கேட்டுக்கொண்டார்